கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தற்போதுள்ள வைரஸை விட மிகப் பயங்கரமானதாக இருக்கும் – விஞ்ஞானிகள் உலகுக்கு எச்சரிக்கை!

Saturday, November 7th, 2020

கொரோனா வைரஸ் தொற்று மூன்றாவது அலை வருமானால் அது தற்போதுள்ள வைரஸை விட மிகப் பயங்கரமானதாக இருக்குமென கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் ஜயரூவன் பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் –

உலகில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் அவ்வாறு மருந்து கண்டுபிடிக்கப்படாமல் போனால் மூன்றாவது மோசமான அலையை எதிர்கொள்ள நேரலாமென ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் நாம் பழக்கப்படுத்திக் கொண்டுள்ள சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் காத்திரமாக பின்பற்றுவது அவசியமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் கொரோனா வைரஸுடன் மேலும் சுமார் 02 வருடங்களை நாம் கழிக்க வேண்டியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகளும் தெரிவிக்கும் கூற்றின் படி

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் போதாவது நாம் மருந்துகளை கண்டுபிடிக்காவிட்டால் அடுத்த வருடத்தில் ஆரம்ப பகுதியிலேயே மூன்றாவது அலையை எதிர்கொள்ள நேரும். அது மிக பயங்கரமானதாக அமையலாம் என்று எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: