கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: அவசர கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்!

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் அச்சத்திற்கு முகம் கொடுத்து கொடுத்துள்ள நிலையில் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், முக்கிய கூட்டமொன்றை நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த விசேட கூட்டமொன்று நாளை (02) காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் இக்கூட்டத்தில் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த கூட்டத்தில், கட்சித் தலைவர்களுக்கு அப்பால், ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, படைகளின் தளபதிகள் மற்றும் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வடக்கிலும் இவ்வாரம் முதல் பூஸ்டர் தடுப்பூசி - சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் அறிவிப்பு!
யுக்ரைனின் இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தம் - பொதுமக்கள் வெளியேறுவதற்காகவே இந்த நடவடிக்கை எ...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க விஜயம் நாட்டுக்கு பல நன்மைகளை உருவாக்கும் - ஜனாதிபதியின் சிர...
|
|