திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைக் காலம் நீடிப்பு – நீதி அமைச்சு அறிப்பு!

Tuesday, August 17th, 2021

நாட்டில் நிலவும் கொரோனா நிலவரத்தை கருத்திற் கொண்டு, திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைக் காலத்தை நீடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, நிரந்தர மற்றும் தற்காலிக திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைக் காலம் டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக என நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் 70 வயதை நிறைவு செய்தவர்கள் மற்றும் மார்ச் 31 ஆம் திகதிக்குப் பின்னர் சேவை நீடிப்பைப் பெறாத பிரேதப் பரிசோதகர்கள் சேவை நீடிப்புகளுக்கு விண்ணப் பங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை எனவும் நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பின்னர் திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவை நீடிப்பு குறித்து வழக்கமான நெறிமுறை பின்பற்றப்படும் எனவும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர்களுக்கு இந்தச் சுற்றறிக்கை பொருந்தாது என்றும் நீதி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் இறக்குமதி செய்யப்படும் - வர்த்தகத்துறை அமைச்சர் எச்சரிக்கை!
அடுத்த ஆண்டு பெப்ரவரிவரை பரீட்சையை ஒத்திவையுங்கள் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் உயர்தர மாணவர்கள்...
சாதாரண தரப் பரீட்சை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் - பரீட்சைகள் ஆணையாளர் ...