கொரோனா தொற்றாளர்களுக்கு ஆபத்தாக மாறும் இரத்த உறைவு – எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

Sunday, May 17th, 2020

கொரோனா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 30 வீதமானோருக்கு ஆபத்தான இரத்த உறைவுகள் ஏற்பட்டு வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் “த்ரோம்போசிஸ்” என்றும் அழைக்கப்படும் இரத்த கட்டிகளே கொரோனா தொற்றாளர்களின் இறப்பு எண்ணிக்கையில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நுரையீரலில் கடுமையான வீக்கம் அடைவதுடன் வைரஸுக்கு எதிராக உடலின் இயற்கையான பதில் என்பனவும் இந்த இரத்த உறைவுகளுக்கு காரணமாக இருப்பதாகவும் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவர்கள் பொதுவாக எதிர்பார்ப்பதை விட மிக அதிகமான இரத்தக்கட்டிகளைக் காண்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நோயாளிகளின் நுரையீரலில் நூற்றுக்கணக்கான நுண்ணிய கட்டிகளை கூட மருத்துவர்கள் கண்டுபிடித்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: