நல்லாசிரியர் விருதுக்கு உள்வாங்காதது ஏன்? கேள்வி எழுப்பும் தனியார் பாடசாலைகள்

Thursday, November 16th, 2017

குருபிரதீபா எனும் நல்லாசிரியர் விருதுக்கு தனியார் பாடசாலைகள் ஏன் உள்வாங்கப்படவில்லை. வடக்கு மாகாண கல்வி அமைச்சு இந்த விடயத்தை எடுக்குமா என கேள்வி எழுப்பியுள்ளனர் சில தனியார் பாடசாலைகளின் நிர்வாகிகள்.

தனியார் பாடசாலைகள் வலயரீதியாக ஒப்பிட்டுப் பார்க்கும் போது சிறந்த கல்வி அடைவு மட்டத்தையும், பெறுபேறுகளையும் வெளிக்காட்டி சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகின்றன. இந்தப் பாடசாலைகள் தனியார் கட்டமைப்புக்குள் உட்பட்டுள்ள அதே நேரம் அரசின் சுற்றறிக்கைகள், போட்டிகள் நிகழ்வுகளில் கலந்து நாட்டிற்கு உயர்ந்த அடைவு மட்டங்களை பெற்றுத் தருகின்றன.

இந்த நிலையில் ஆசிரியர்களை மதிப்பளித்து வழங்கும் இந்த விருதுக்கு குறித்த பாடசாலை ஆசிரியர்கள் உள்வாங்கப்படவில்லை. ஆகவே எதிர் காலத்தில் குருபிரதீபா விருதுக்கு அந்தப் பாடசாலைகளையும் உள்வாங்க வடக்கு கல்வி அமைச்சர், செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த வருடம் விருது பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் அண்மையில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் மதிப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பாடசாலைகள் இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: