கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதை சவாலுக்கு உட்படுத்தும் மனு நிராகரிப்பு!

Tuesday, December 1st, 2020

கொரோனாவினால் உயிரிழப்போரின் பூதவுடல்களை தகனம் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்ணான்டோ மற்றும் பிரித்தி பத்மன் சூரசேன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தள்ளுபடி செய்யப்பட்டது. கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதை சவாலுக்கு உட்படுத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், உயிரிழந்த முஸ்லிம்களின் உறவினர்கள் உள்ளிட்ட சிலரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

யாழ். பொது நூலகத்திற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க  நூல்களை அன்பளிப்புச் செய்த கனடிய வெளிவிவகார அமைச்ச...
ஊழல்களுக்கு அங்கீகாரம் தேடுகிறார் சுமந்திரன் - குற்றம் சுமத்துகிறார் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட மே...
பாதுகாப்பை உறுதி செய்வது இராணுவத்தின் பொறுப்பு - இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா!

நன்றி கெட்ட தமிழினம் அவப் பெயரை மாற்றும் வகையில் எம்முடைய வாக்களிப்பு அமைய வேண்டும்: தென்மாராட்சி இள...
இலங்கையின் பூகோள அமைப்பே பல்வேறு சவால்களிற்கு முகம்கொடுக்க நேரிட்டது – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!
கடன்களை மீளச்செலுத்தமுடியாதவாறு முறிவடையக்கூடிய நிலையின் விளிம்பில் இலங்கை - வெளியாகும் செய்திகளில...