கொரோனா தாக்கத்தின் எதிரொலி : இலங்கை களஞ்சியங்களில் நிரம்பி வழியுகிறது எரிபொருள்கள் – பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, April 30th, 2020

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டத்தினால் இலங்கையில் பெற்றோல், டீசல் பயன்பாடு 50 சதவீதத்தினால் சரிந்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் வேஸ் மொஹமட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டிலுள்ள 11 களஞ்சிய நிலையங்களிலும் எரிபொருள் நிரம்பி வழிவதனால், நாட்டிற்குள் வரும் எரிபொருள் கப்பல்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பல நாடுகளில் எரிபொருள் பயன்பாட்டை விட அதிகமான களஞ்சியத்தில் இருப்பதால் அந்நாடுகளில் எரிபொருள் விலை 90 வீதம் வரை குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக அமெரிக்காவில் எரிபொருள் வாங்கும் நபர்களுக்கு வாங்கும் பணத்தைவிட அதிகமான பணத்தை அரசாங்கம் கொடுத்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு ஊக்கப்படுத்துவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: