அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை?

Friday, August 11th, 2017

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல் ஆகியன முடிவடைந்த பின்னர் வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்றின்போதே ஊவா மாகாண சபையின் பொதுமனுக்கள் குழு தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் சமிந்த விஜேசிறி எம்.பி. கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அவ்வேளையில் அமைச்சர் சபையில் பிரசன்னமாகியிருக்காததால், ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக்க பதில்களை வழங்கினார். இதையடுத்து கருத்து வெளியிட்ட ஆளுங்கட்சி எம்.பியான சமிந்த விஜேசிறி, ஊவா மாகாண சபையின் பிரச்சினைகள் சம்பந்தமாக தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வருகின்றேன்.

ஆனால், பதில்களை வழங்குவதற்கு அமைச்சர் வருவதில்லை. கேள்வி பதில் நேரத்தின் போது அமைச்சர்கள் சபையில் இருக்க வேண்டும் என்று சபாநாயகர் அறிவுறுத்தியும் அது உரிய வகையில் நடக்கவில்லை.எனவே, அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்குத் தயாராகி வருகின்றேன். இதற்குப் பின்வரிசை எம்.பிக்களும் ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகின்றேன் என தெரிவித்திருந்தார்.

Related posts:


புதிய அரசியலமைப்பிற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்கமாறு மக்களிடம...
மீண்டும் அச்சுறுத்தலை நோக்கி நகரும் இலங்கை – எச்சரிக்கை செய்துள்ளார் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அச...
ஓகஸ்ட் - டிசம்பர் மாதங்களில் பாடசாலை நாட்களை அதிகரிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...