கொடை இயல்புடைய சுட்டியில் இலங்கைக்கு ஐந்தாவது இடம்!

Wednesday, October 26th, 2016

உலக கொடையியல்புடைய சுட்டியில், இலங்கை 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்று, ஐக்கிய இராஜ்ஜியத்தை மையமாகக் கொண்டு தொழிற்பட்டு வரும் செரிட்டி எய்ட் பவுண்டேஷன், அறிக்கை வெளியிட்டுள்ளது.

140 நாடுகளிலுள்ள 148,000 மக்களைக்கொண்டு, பண நன்கொடை வழங்கு​வோர், தெரியாதவர்களுக்கு உதவி செய்தல் மற்றும் தன்னார்வமாகச் செயற்படுதல் போன்ற செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், உலக கொடையியல்புடைய நாடுகள் தெரிவு செய்யப்பட்டன.

கடந்த 2014ஆம் ஆண்டு 9ஆவது இடத்தையும் 2015ஆம் ஆண்டு 8ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்ட இலங்கை, இம்முறை 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மியன்மார் முதலாவது இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் அவுஸ்திரேலியா 3ஆவது இடத்திலும் நியூசிலாந்து 4ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

இதேவேளையில், இலங்கையின் அயல்நாடான இந்தியா 91 ஆவது இடத்தையும் பாகிஸ்தான் 91, ஆப்கானிஸ்தான் 78, நேபாளம் 39, பூட்டான் 18, பங்களாதேஷ் 94ஆவது இடங்களையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

article_1477455116-image_1477388172-4dc554f63e

Related posts: