கொரோனா அச்சுறுத்தலின் பின்னர் இன்று அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்பினர்!
Monday, March 8th, 2021
அனைத்து அரச ஊழியர்களும் இன்றுமுதல் கடமைக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை அமைச்சின் செயலாளர் ஜி. ஜி.ரத்னசிறியின் கையொப்பத்துடன் அனைத்து அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொவிட் -19 பரவல் காரணமாக அரச பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன், சுகாதார வழிகாட்டுதல்களுடன் அரச அலுவலகங்களின் பணிகளை முன்னெடுக்க தேவையான பணியாளர்களை மாத்திரம் அழைக்கும் அதிகாரம் நிறுவனத்தின் தலைவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், இன்றுமுதல் வழக்கம் போன்று அனைத்து அரச ஊழியர்களையும் கடமைக்கு அழைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதனடிப்படையில் இன்று ஊழியர்கள் தமது கடகைளுக்காக அலுவலகங்களுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கடனைக் கேட்ட பெண்ணின் மீது தாக்குதல் – தென்மராட்சியில் சம்பவம்!
கொரோனா முடக்க நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டது புங்குடுதீவு - எனினும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும...
நீதித்துறைக்கு 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு - நீதி அமைச்சர் தெரிவிப்பு!
|
|
|


