கொரோனாவின் பின்னரான சிகிச்சை திட்டத்தை தொடங்க அமைச்சு முடிவு – இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவிப்பு!
Friday, September 10th, 2021
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு கொரோனாவின் பின்னரான சிகிச்சை திட்டத்தை தொடங்க சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி அமைச்சு முடிவு செய்துள்ளது.
ஆயுர்வேத மருத்துவத்துறையில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட நோயாளிகளுக்கான நோய்க்கு பின்னரான சிகிச்சை திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த பின்னரான ஏனைய நோய் தொற்றுகள் மற்றும் உயிரிழப்புகள் நேரிடுவதை தடுக்கும் நோக்குடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று, சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்
Related posts:
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற அதிசொகுசு பேருந்து கோர விபத்து: நால்வர் பரிதாப பலி!
மினுவங்கொடை கொத்தணியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து நாநூறை அண்மித்துள்ளத...
வட்டுக்கோட்ட கொலை சம்பவம் - விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் கய...
|
|
|


