கொதலாவலபுர சமாதி பௌத்த மையத்தின் தங்க வேலியுடனான போதி சுவர் பிரதமரினால் திறந்துவைப்பு!

இரத்மலானை, கொதலாவலபுர சமாதி பௌத்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தங்க வேலியுடனான போதி சுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இரத்மலானை, கொதலாவலபுர சமாதி பௌத்த மத்தியஸ்தானாபதி, மாத்தறை வெஹெரஹேன பூர்வாராம ராஜமஹா விகாராதிவாசி, வணக்கத்திற்குரிய மாபலகம புத்தசிறி தேரரின் அனுசாசனத்திற்கமைய சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊழியர் பங்களிப்புடன் இந்த தங்க வேலியுடனான போதி சுவர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சியம் மஹா நிகாயவின் கோட்டே பீடத்தின் அனுசாசகர், பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் வணக்கத்திற்குரிய கொடபிடியே ராஹுல தேரர் மற்றும் நாராஹேன்பிட அபராமாதிபதி, மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|