கொக்குவில் பகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல்!
Sunday, March 4th, 2018
யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீட்டின் கதவுகளையும் இனந்தெரியாத நபர்கள் உடைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி வீதியில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாத நபர்கள் சிலர் இந்த வீட்டிற்குச் சென்று மோகன் அசோக் நிற்கிறானா என்று கேட்டு வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன், வீட்டினையும் உடைத்துள்ளனர்.
உடைத்துவிட்டுச் சென்ற நேரம் இருவர் பொது மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஒப்படைக்கப்பட்ட இருவரும் யாழ்.கொட்டடிப் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். மோகன் அசோக் ஆவாகுழுவுடன் சம்பந்தப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பாக விசாரணைகளையும் முன்னெடுத்துவருகின்றனர்.
Related posts:
முறைப்பாடு செய்ய வருகிறது புதிய நடைமுறை!
கூடுதலான கட்டணங்களை அறவிட்டால் நட்ட நடவடிக்கை – பேருந்து உரிமையாளர்கக்கு கடும் எச்சரிக்கை!
சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் - குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தச் சட்டத்தை உருவாக்க...
|
|
|


