கைதிகளை கருணையாக நடத்துங்கள் – சிறைச்சாலை ஊழியர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தல்!

Friday, September 30th, 2016

கைதிகளை கருணையாக நடத்துமாறு சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க குணதிலக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்

சந்தேக நபர்கள் அல்லது கைதிகளும் மனிதர்களே. எனவே அவர்களை நீதிமன்றில் அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள் நடத்தக் கூடாது. சிறைச்சாலை அதிகாரிகள் இதனை விடவும் கருணையாக இருக்க வேண்டும். தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் நிபுண ராமநாயக்க தாக்கப்பட்ட சமப்வம் தொடர்பிலான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக கொழும்பு வடக்கின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் அமர்ந்திருந்த ஓர் இருக்கையிலிருந்து எழுப்பப்பட்டு வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனை அவதானித்த நீதவான் கைதிகளையும் கருணையாக நடத்த வேண்டும்.கைதிகள் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் அவர்களை கிரமமான முறையில் அமரச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

high court 7878r

Related posts: