கேரதீவு – சங்குப்பிட்டி வீதியில் வாகனங்களுக்கு இடையூறாக புகைப்படம் எடுக்கும் பயணிகளால் அசௌகரியம் சாரதிகள் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம் – மன்னார் செல்லும் கேரதீவு ௲ சங்குப்பிட்டி வீதியில் பயணிக்கின்ற வாகனங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக வாகனங்களின் சாரதிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது:
இவ்வீதியில் பயணிப்போர் வீதியின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு வீதிக்கு குறுக்காக நின்று புகைப்படம் செல்பி ஆகியவற்றை எடுக்கும் வேளையில் விபத்துக்களைச் சந்திக்க நேரிடுவதாக வாகனங்களின் சாரதிகளினால் தெரிவிக்கப்படுகின்றது.
கேரதீவு – சங்குப்பிட்டி வீதியின் அதி உயர் பகுதிக்கு சென்று கீழிறங்கும் வாகனங்கள் இவ்வாறு புகைப்படம் எடுப்பவர்களினால் திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழக்க நேரிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாகனங்களின் போக்குவரத்தை அவதானிக்காமல் வீதியின் ஒரு புறத்தில் இருந்து மறுபக்கம் செல்வோரினால் விபத்துக்கள் ஏற்படுவதாக சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
கரையோரங்களில் நிற்பவர்கள் வெற்று பியர் ரின்கள் மது போத்தல்கள் ஆகியவற்றை வீதியில் எறிந்து விட்டு செல்வதனால் அவை சிதைவடைந்து வாகனங்களின் ரயர்களில் ஏறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கழிவகற்றும் தொட்டிகள் வைக்கப்படாமல் சிறந்த முறையில் அவை அகற்றப்படாமையாலேயே இவ்வாறு நடைபெறுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஆதலால் போக்குவரத்து பொலிஸார் கூடிய கவனம் செலுத்தி உயிரிழப்புக்கள் ஏற்படாதவாறு வாகனங்களில் செல்வோருக்கு உதவ முன்வர வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
Related posts:
|
|