பண்டிகை காலப்பகுதியில் கொரோனா பரவும் வகையில் மக்கள் செயற்பட்டால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் – சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் எச்சரிக்கை!

Saturday, November 27th, 2021

பண்டிகை காலப்பகுதியில் கொரோனா தொற்று பரவும் வகையில் மக்கள் செயற்பட்டால் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க நேரிடும் என சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார பணியகத்தில் இடம்பெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய காலப்பகுதியிலுள்ள சுகாதார வழிகாட்டல்கள் இதற்கு முன்னர் காணப்பட்டதை விடவும் தளர்த்தப்பட்டுள்ளன.

பொதுவாகப் பண்டிகைக் காலங்களில், சிறு குழந்தைமுதல் அனைவருக்கும் சமூக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பண்டிகைக் காலத்துடன் தொடர்புடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட்டாலும் சிலர் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாமல் இருப்பது ஆபத்தான விடயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

000

Related posts:

திருமலையில் தமிழர் விகிதாசாரத்தைப் பாதுகாத்தது ஈ.பி.டி.பின் அரசியல் சாணக்கியமாகும் - ஊடகப் பேச்சாளர...
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை - எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ...
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் - இதுவே நுகர்வோருக்கும் நன்மை...