கூ.சங்கங்கள் அரிசியை இனி சமாசத்தில்தான் பெறவேண்டும் – மாகாண கூட்டுறவு ஆணையாளர்!

Friday, January 11th, 2019

வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் அமைக்கப்பட்டிருக்கும் அரிசி ஆலைகள் உரிமையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் ஊடாகவே எதிர்காலத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் அரிசிகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது ஐந்து மாவட்டங்களிலும் அரிசி ஆலைகள் உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் இணைந்து அதற்கான சமாசமும் அமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள சகல அரிசி ஆலைகள் உரிமையாளர் கூட்டுறவுச் சங்கமும் இணைந்து சமாசங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சமாசங்கள் ஊடாகவே வடக்கிலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அரிசி கொள்வனவு செய்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.

வடக்கில் கடந்த வருடங்களாகச் செயற்படாமல் இருக்கும் அரிசி ஆலை உரிமையாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மீளவும் செயற்படுத்தி வைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதனைவிட சகல அரிசி ஆலைகளும் எதிர்காலத்தில் நவீனப்படுத்தப்படும். குறிப்பாக வடக்கில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைக் கொள்வனவு செய்து இந்த ஆலைகள் ஊடாக அவற்றை அரிசி ஆக்கி நுகர்வோருக்கு விநியோகிக்கப்படும்.

அத்துடன் இந்த ஆண்டின் பெரும்போக நெற்செய்கை அறுவடையின்போது இந்த அரிசி ஆலைகள் உரிமையாளர் கூட்டுறவுச் சங்கங்கள் கூடுதலாகச் செய்கையை கொள்வனவு செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related posts: