கூட்டுறவுப் பணியாளர்களுக்கு பணியிலிணைந்த நாளிலிருந்து சேவைக்காலக் கொடுப்பனவு!

கூட்டுறவுப் பணிப்பாளர்களுக்கான சேவைக்காலக் கொடுப்பனவு பணியாளர் பணியில் இணைந்த நாளிலிருந்தே கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும். இதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூட்டுறவுப் பணியாளர்கள் குழப்பமடைய வேண்டியதில்லை என்று வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது –
பணியாளர் ஒருவர் சங்கத்தின் பணியில் அதாவது தற்காலிகமாக இணைக்கப்பட்ட நாளில் இருந்தே இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவேண்டும்.
அதனைவிட பணியாளர் ஒருவர் தான் பணியில் இணைந்த சங்கத்தில் இருந்து இன்னுமொரு சங்கத்துக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றால் அவர்களின் பணிநாள்களை சேவைக் காலக்கொடுப்பனவு ஆணைக்குழுவின் விதிக்கு அமைய கணக்கிடப்படவேண்டும்.
சேவைக்காலக் கொடுப்பனவு வழங்கும்போது சங்கங்களில் குழப்பநிலை அண்மைக்காலமாக நிலவி வந்தது. ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக இந்தக் கொடுப்பனவை சங்கங்களின் பணியாளர்களுக்கு கணக்கிட்டு வழங்கமுடியும் என்றும் ஊழியர் ஆணைக்குழு தெரிவித்தது.
இதேசமயம் அனேகமான பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் இந்த சேவைக்கால கொடுப்பனவுகளை பணியாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அத்துடன் இந்தக் கொடுப்பனவுக்கான நிலுவைப் பணத்தையும் இந்தச் சங்கங்கள் இந்த ஆண்டு வழங்கவும் தீர்மானித்துள்ளன.
Related posts:
|
|