கூட்டமைப்பின் பேச்சில் நம்பிக்கை இல்லை : தொடர்கிறது  பட்டினிப்போராட்டம்

Tuesday, March 8th, 2016
தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ள போதும்  அவர்களத கோரிக்கைக்கு செவிசாய்க்காத அரசியல் கைதிகள் தொடர்ந்தும் 15 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஒரு பெண் உள்ளிட்ட 14 தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல் கைதிகளிடம் வேண்டுகோள் விடுத்தது.
கைதிகளின் விடுதலை தொடர்பாக இன்று  செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் முழுநாள் விவாதம் ஒன்று நடைபெறவுள்ள நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு கூட்டமைப்பினால் வலியுறுத்தப்பட்டது.
எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறித்த கோரிக்கை நேரடியாக அரசியல் கைதிகளிடம் தெரிவிக்கப்படாத நிலையில் 14 அரசியல் கைதிகளும் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: