இலங்கையின் பெண் தொழில் முனைவோரின் வா்த்தக முயற்சிகளின் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவாக அமெரிக்கா நிதி உதவி!

Sunday, November 14th, 2021

இலங்கையின் சமூகம் சார்ந்த வா்த்தக முயற்சிகளின் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவாக இலங்கையின் DFCC வங்கிக்கு அமெரிக்க அரசாங்கம் 150 மில்லியன் டொலா் நிதியுதவியை வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. இது இலங்கைக்கான அமெரிக்க அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தால் (DFC) வழங்கப்படும் மிகப்பெரிய கடன் வழங்கல் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உள்ளூர் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு, குறிப்பாக பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட 265 மில்லியன் டொலர் நிதியுதவின் ஒரு பகுதியாகும்.

பெண் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றான நிதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்த கடன் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமெரிக்கத் துாதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. .

000

Related posts: