மிக அவசர தேவையை தவிர ஏனையவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் – ஜனாதிபதி!

Friday, October 30th, 2020

மிக அவசர தேவையை தவிர  ஏனையவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன் ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையாக சட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பொருட்கள் விநியோகத்தின் போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அனைத்து தரப்பின் ஆதரவு அவசியம்.

அத்துடன் அவதானமிக்க பகுதிகளில் திருமண நிகழ்வு மற்றும் மத வழிப்பாடு உட்பட மக்கள் ஒன்று கூடுவதனை தவிர்க்குமாறும்  ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சேதனப் பசளையினை உற்பத்தி செய்வதற்காக கால்நடை பண்ணைகளை அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்!
நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் போதிய விளக்கம் வழங்கப்பட்டுள்ளது - வ...
வாரத்தில் 3 நாட்கள் மாத்திரம் பாடசாலை – முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது - கல்வி அமைச்சு அறிவி...