கூட்டமைப்பின் உறுப்பினர் கொண்டுவந்த பிரேரணையால் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்குள் சண்டை – வேலணை பிரதேச சபை ஒத்திவைப்பு!

Thursday, July 26th, 2018

தனது சுய இலாபத்துக்காக பொய்யான தகவலை வெளியிட்டு மக்களை குழப்பும் முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் வெளியிட்ட செய்திகள் சபைக்கும் ஒட்டுமொத்த சபை உறுப்பினர்களுக்கும் அபகீர்த்தியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து குறித்த உறுப்பினருக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேலணை பிரதேச சபையில் சபை உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் சபையின் கேட்போர் கூடத்தில் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதன்போதே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பில் தெரியவருவதாவது –

வேலணை பிரதேச சபையினால் கொண்டுவரப்பட்ட குடிநீர் வழங்கலுக்கான கட்டுப்பாட்டை அடுத்து புங்குடு தீவு பகுதிக்கு குடிநீர் வழங்கப்படுவது தொடர்பில் உள்ள சர்சைகளை அடுத்து குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஊடகங்களுக்கு செய்திகள் வழங்கியும் அமைப்புகளின் பெயரை பயன்படுத்தி துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டும்  சில சபை உறுப்பினர்களை தவறானவர்கள் என சித்தரித்து வெளியிட்ட செய்திகளால் இன்றையதினம் நடைபெற்ற சபை அமர்வு பெரும் போர்க்களமாக காணப்பட்டது.

நாவலன் வெளியிட்ட செய்திகள் தவறானவை என்றும் விகிதாசார முறையில் தெரிவான உறுப்பினர்களை தரம்குறைத்து வெளியிட்ட கருத்துக்கள் உறுப்பினர்களின’; சிறப்புரிமையை பாதிக்கின்றது என்றும் இவை தவறானது என்பதுடன் சபையும் உறுப்பினர்களும் அவமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவற்றை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு உறுப்பினரான வசந்தகுமார் சபையில் கருத்து முன்வைத்தார்.

இதனைத்தொடர்ந்து சபையிலுள்ள அனைத்த கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் நாவலனின் பொய்யான கருத்து தொர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நாவலன் வெளியிட்ட குறித்த தகவலை ஆராய்ந்து அதன் உண்மை தன்மை வெளியிட வேண்டும் என்றும் தமது கருத்துக்களை மிகக்காரசாரமாக முன்வைத்தனர். அத்துடன் இது தொடர்பில் நாவலனை கருத்து தெரியப்படுத்தும்படி கோரியிருந்தனர்.

இதையடுத்து நாவலன் மக்கள் அப்படி சொல்லுகின்றார்கள். தான் நான் அப்படிச் செய்தேன். என விளையாட்டுத் தனமாக விளக்கம் கொடுத்தார். இதனால் சபையில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் நாவலனின் செயற்பாடு திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டதொன்று என்றும் இது பிரதேச சபையையும் அதன் ஒட்டுமொத்த  உறுப்பினர்களையும் அவமதித்துள்ளது என்பதுடன் புங்குடுதீவு மக்களிடம் தவறான செய்திகளை பரப்பி மக்களை நாவலன் குழப்பியுள்ளார் என்றும் தெரிவித்ததுடன் நாவலனுடன் தொடர்புடைய பொது அமைப்புகளான உலக மையாம், மக்கள் ஒன்றியம், பசுமைப்புரட்சி குழு, தீவக மக்கள் ஒன்றியம் என்பவற்றையும் உடனடியாக விசாரணைகள்  செயது உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.

அத்துடன் பொய்யான தகவலை பரப்பிவரும் நாவலன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. குறித்த விடயம் பெரும் சர்ச்சையாக மாறியதால் சபை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts: