குவைட்டில் இலங்கையர்களுக்கு அதிகளவு தொழில் வாய்ப்பு!

அதிகளவு இலங்கையர்கள் குவைட்டில் துறை சார்ந்த நிபுணர்களுக்கான தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சின் தகவல்களைமேற்கோள்காட்டி அல் அன்பா டெய்லி என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குவைட் சுகாதார அமைச்சு வெளிநாட்டவர்களுக்கு 2 ஆயிரத்து 140 தொழில் வாய்ப்புகளை உருவாக்குமாறு அந்த நாட்டின் சிவில் சேவைகள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.
அதன்படி வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் ஆகிய துறைசார் நிபுணர்கள் விரைவில் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.
இதன்போது இலங்கை இந்தியா சிரியா பங்களாதேஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நாட்டில் அடிப்படைவாதங்களுக்கு இடமில்லை: அடியோடு ஒழிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலர் தெரிவிப...
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் கைது!
மின் , வலுசக்தி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அமெரிக்க திறைசேறி துணை உதவி செயலாளருக்கு விளக்கமளிப்பு!
|
|