குழந்தை தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.!
Thursday, February 6th, 2020
16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் துணை நிரந்தர பிரதிநிதி எம்மா ப்ரிகாம் மற்றும் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்டமறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை சிறைச்சாலைகளக்கு அனுப்புவதை தவிர்ப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் போது இலங்கையில் மரண தண்டனை தொடர்பிலும் ஏனைய நீதித்துறை சார்ந்த விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக நீதி அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
மேலும் 2,700 சமுர்த்தி முகாமையாளர்களை உள்வாங்க திட்டம்! - அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க!
இலங்கையின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு நோர்வே அரசு உதவி!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


