மின் விநியோகத் தடை தொடரும் – மின்சக்தி அமைச்சு அறிவிப்பு!
Thursday, December 23rd, 2021
நாடளாவிய ரீதியில் நாளொன்றில் சுமார் 45 நிமிடங்கள் மின் விநியோகத் தடை ஏற்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மின்பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை இன்னும் சில நாட்களுக்கு நாளாந்த மின் துண்டிப்பு தொடரும் எனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிமுதல் இரவு 9.30 மணிவரை மின் விநியோகத் தடை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
மாணவர்களை காப்பாற்றிய இலங்கை விமானிகளின் பிள்ளைகளை புறக்கணிக்கும் பாடசாலைகள்!
முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைக்கும் – ஜனாதிபதியிடம் தென்கொரிய...
|
|
|


