நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Thursday, December 9th, 2021

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

அத்துடன் யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு, திருகோணமலை, அனுராதபுரம், மட்டக்களப்பு, காலி, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி தொடர்பில் அரசியல்வாதிகள் சிலருக்கு எதிராக 21 முறைப்பாடுகள்!
ஊரடங்கு அமுலில் இல்லாத இடங்களிலும் மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடவேண்டாம் - ஜனாதிபதி ஊடகப்பிரிவு வ...
அரச ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளம் வழங்குதில் எந்தவித சிக்கலும் கிடையாது - துறைசார் அதிகாரிகள் தெரி...