குளங்கள் அனைத்தும் அபாய மட்டத்தை அடைந்துவிட்டன – முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை!

Saturday, January 16th, 2021

முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள தகவலின் பிகாரம்  தமது ஆளுகையின் கீழ் உள்ள 20 பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனடிப்படையில் 24 அடி கொள்ளளவு கொண்ட முத்தையன்கட்டு குளம் 23’ 9″ அடியினை எட்டியுள்ளதாகவும் நிலைமைக்கு ஏற்ப வான்கதவுகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது..

எனவே பண்டாரவன்னி. பேராறு. கனகரத்தினபுரம். வசந்தபுரம். கெருடமடு. கற்சிலைமடு மூன்றாம் கண்டம். மன்னாகண்டல் மூன்றாம் கண்டம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: