மிகை ஊழியர் என்று பாராது அதிபர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் – பாதிக்கப்பட்ட அதிபர்கள் கோரிக்கை!

Monday, March 5th, 2018

பாடசாலை அதிபர்களுக்கு அண்மையில் சம்பளத்துடன் கூடிய சிறப்புக் கொடுப்பனவு இணைக்கப்பட்டு வழங்கப்பட்டது. இருந்தும் பல அதிபர்களுக்கு இந்தக் கொடுப்பனவு கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட அதிபர்கள் குற்றஞ் சாட்டினர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :

அதிபர் சேவையில் உள்ளவர்களுக்கு அதிபர் படி என்ற புதிய கொடுப்பனவு அன்மையில் வழங்கப்பட்டது இதில் வடக்கில் பல அதிபர்களுக்கு அந்தக் கொடுப்பனவு கிடைக்கவில்லை. மிகை ஊழியராக உள்வாங்கப்பட்டவர்கள் கொடுப்பனவுக்கு உள் வாங்கப்படவில்லை என்று காரணம் தெரிவிகப்பட்டது .

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட அதிபர்கள் தெரிவித்தாவது :

கடந்த 2013 ஆம் ஆண்டு மிகை ஊழியர் என்ற அடிப்படையில் பல அதிபர்கள் உள்வாங்கப்பட்டனர். இந்த நிலையில் அதே ஆண்டிலேயே அவர்கள் அதிபர் சம்பளக் கொடுப்பனவில் இணைக்கப்பட்டனர். தற்போது மிகை ஊழியர் என் உள்வாங்கப்பட்டு பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்ற அதிபர்கள் ஏனைய அதிபர்கள் ஆற்றும் கடமைகளுக்கு அமைவாக  அனைத்துக் கடமைகளையும் ஆற்றி வருகின்றனர் என்னும் கொடுப்பனவு வழங்கப்படவில்லை வடக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இவ்வாறானவர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது அத்துடன் ஏனைய மாகாணங்களில் பதில் கடமையாற்றுகின்ற அதிபர்களுக்கும்  கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது .எனினும் வடக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை.

துணுக்காய் வலயக்கல்வி அலுவலகத்தில் கடந்த வாரம் இடம் பெற்ற அதிபர்கள் கூட்டத்தில் ,அதிபர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டட அதிபர்கள் தொடர்பில் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி பாதிக்கப்பட்ட அதிபர்களின் கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது .

விசேட செயற்பாடுகளுக்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் விசேட செயற்பாடுகள் மேற்கொள்ளும் அனைத்து அதிபர்களும் வழங்கப்பட வேண்டும் .இது தொடர்பாக நடுநிலையான தீர்மானத்திற்கு கல்வித் திணைக்களங்கள் வர வேண்டும் என்றனர்.

Related posts: