குளங்களை அண்மித்து நடைபயிற்சி தடங்களை அமைக்க 2 பில்லியன் நிதி ஒதுக்கீடு – நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Monday, September 20th, 2021

நாட்டில் மேலும் பல குளங்களை அண்மித்து நடைபயிற்சி தடங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளததாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் N.P.K. ரணவீர தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பெலிஅத்த, அம்பிட்டிய, கம்புறுகமுவ, குருணாகல் மற்றும் கந்தளாய் குளம் ஆகியவற்றை அண்மித்து நடைபயிற்சி தடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் N.P.K. ரணவீர தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வேலைத்திட்டங்களுக்காக 2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும் குறித்த திட்டங்கள் இடைநிறுத்தப்படாது என அவர் கூறியுள்ளார்.

சுற்றாடல் அமைப்புகள், சூழலியலாளர்கள், மத தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புகள் உள்ளிட்ட தரப்பினர் இந்த வேலைத்திட்டத்திற்கு எதிராக முன்வைக்கும் விடயங்கள் நியாயமானவையாக இருந்தால் மாத்திரம் அவற்றுக்கு சிறந்த பதிலை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பராக்கிரம சமுத்திரத்தை அண்மித்து நடைபாதை அமைக்கும் திட்டம், நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியிலாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைவாக முன்னெடுக்கப்படுமென நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவச மின்சாரம் - மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவிப்பு!
எதிர்கட்சிகள் முன்னெடுக்கும் திட்டங்களை நாங்கள் ஒன்றிணைந்து முறியடிப்போம் - வெளிவிவகார அமைச்சர் தினே...
பஹ்ரைனுடனான பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கலந்...