சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் திட்டத்தை விரிவுபடுத்த உலகவங்கி கடனுதவி!

Thursday, December 29th, 2016

சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திற்கும் இடையில் கடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதிஅமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்எச் எஸ் சமரதுங்கவும் உலகவங்கியின்சார்பில் இலங்கைக்கான வதிவிடப்பணிப்பாளர் ஐடாஸ் சுவராயி றிட்டிகோவும் கைச்சாத்திட்டனர்.

இது தொடர்பான நிகழ்வு நேற்று நிதியமைச்சில் இடம்பெற்றது.

இந்த நிதி உதவியின் கீழான வேலைத்திட்டம் 2017ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டுவரை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சமநிலை மேம்படுத்துதல் நாட்டின் சமூகப்பாதுகாப்பு வலைப்பின்னலை விதிகளுக்கமைவாக முன்னெடுத்தல் . அதன் செயற்பாடுகளை சிறப்பான முறையில் செயற்படுத்துதல் ஆகியவற்றின் மூலமாக குறைந்த வருமானத்தைகொண்ட பொதுமக்கள் இதன் மூலம் நன்மைகளை பெற்றுக்கொள்வர்.

நிதியமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தில் ஏனைய நிறுவனங்களும் இணைத்துக்கொள்ளப்படும். இந்த உத்தேச வேலைத்திட்டத்திற்கான மொத்தசெலவு 75 மில்லியன் அமெரிக்கடொலர்களாகும். இந்த நிதியை உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் வழங்குகின்றது. இந்த நிதிஉதவியை 5 வருடத்தில் நிவாரண வட்டியின் கீழ் செயற்படுத்தவேண்டும்.

000

Related posts: