குற்றச்செயல் பொறுப்பிற்கான வயதெல்லை அதிகரிப்பிற்கு அமைச்சரவை அங்கிகாரம்!

Saturday, February 17th, 2018

குற்றச்செயல் ஒன்றிற்கான பொறுப்பினை வகிக்கும் குறைந்த வயதெல்லையினை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நீதியமைச்சர் தலதா அதுகோரலவினால், முன்வைக்கப்பட்ட இது தொடர்பான யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தின் அடிப்படையில் 08 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு குற்றத்துக்கான பொறுப்புக்கள் சுமத்தப்படாது.

எனினம், இது மிகக் குறைந்த வயதாக உளவியல் வைத்தியர்கள் மற்றும் அதனுடன் தொடர்பான நிபுணர்களின் எண்ணமாகும்.

அதனடிப்படையில், ஆகக் குறைந்த வயதெல்லையினை 12 வயதாக அதிகரிப்பதற்கும், 12 வயதுக்கு அதிகமான மற்றும் 14 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளுக்கு குறித்த குற்றம் தொடர்பிலான புத்திக் கூர்மை காணப்பட்டதா என்பதை கணிப்பிடும் அதிகாரத்தினை மாவட்ட நீதவான்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதற்காக 1979ம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச்சட்டத்தினை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts: