குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்ய புதிய நிறுவனம் தெரிவு – லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!

Saturday, April 30th, 2022

குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக, தாய்லாந்தின் புதிய நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் சியாம் கேஸ் என்ற நிறுவனம் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்துரைத்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளில், எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனம், மெட்ரிக் டன் ஒன்றுக்கு அறிவிட்ட தொகையை விடவும் 9 டொலர் குறைவாக, புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக, ஓமானில் இருந்து நாட்டுக்கு எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டது. எனினும், குறித்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.

இதற்கமைய அடுத்த மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக விலைமனு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை ஓமான் நிறுவனத்துடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு அமைய குறித்த நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட 3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: