குமுதினி படகு படுகொலையின் போது மரணித்த உறவுகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Tuesday, May 15th, 2018

குமுதினிப் படுகொலை  நடந்துமுடிந்த 33 ஆவது ஆண்டு நினைவு தினமான இன்றையதினம் நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள  குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால்அஞ்சலிமரியாதை செய்யப்பட்டது.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு தனது பயணத்தை வழமைபோல ஆரம்பித்தது. படகு அரை மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தவேளை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

இதனை நினைவு கூரும் முகமாக நெடுந்தீவு பிரதேசத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாக செயலாளர் முரளி தலைமையில் நினைவு கூரல் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது கட்சியின் குறித்த பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்மசாந்திக்காக இறைவழிபாடு மேற்கொள்ளப்பட்டதுடன் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி அங்சலி மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: