எதியோப்பியாவிற்கான இலங்கையின் முதலாவது வதிவிடத்தூதுவர் நியமனம்!

Thursday, March 16th, 2017
எதியோப்பியாவிற்கான இலங்கையின் முதலாவது வதிவிடத்தூதுவராக சுமித் தசநாயக்க பதவியேற்றுள்ளார். இவர் ஆப்பிரிக்க யூனியனுக்கான இலங்கைப்பிரதிநிதியாகவும் செயல்படுகின்றார்.

எதியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபவில் அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்து தனது நியமனம் தொடர்பான ஆவணத்தை கையளித்தார். எதியோப்பியாவின் தேசிய மாளிகையில் இராணுவ மரியாதையுடன் ஒருசிறு விழாவாக இவரது பதவியேற்பு இடம்பெற்றது.  இலங்கை மற்றும் எதியோப்பியாவிற்கிடையிலான அரசியல் உறவுகள் 1972ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வதிவிட தூதுவர் நியமிக்கப்படவில்லை. இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Related posts: