மீண்டும் நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் – ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பு!

Thursday, May 14th, 2020

எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை முன்னிரவு 8 மணிமுதல் 18 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பதுடன் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் நீடிக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா அனர்த்த வலையமாக இன்னமும் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே மாதம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டதன் பின்னர் மே மாதம் 23 ஆம் திகதி சனிக்கிழமை வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் காணப்படும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

முன்பதாக கொரோனா தொற்றின் தாக்கம் இலங்கையில் பரவத் தெர்டங்கியதை அடுத்து சுகாதார துறையினரின் ஆலோசனையின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்தாக சுகாதார தரப்பினர் கூறிய ஆலோசனையின் பிரகாரம் அரசு நாட்டின் நாட்டின்பொருளாதார நிலைமையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்குடன் கடந்த 11 ஆம் திகதி நாட்டை சுகாதார கட்டுப்பாடுகளுடன் முடக்க நிலையிலிருந்து விடுவித்திருந்தது.

இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்வும் படிப்படியாக திரும்பி நாட்டினது பங்குச்சந்தை நடவடிக்கைகளும் முழுவீச்சாக இயங்கத் தொடங்கியிருந்தது.

இந்நிலையில்எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை முன்னிரவு 8 மணிமுதல் 18 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: