குடும்ப உறுப்பினர்களுடன் பண்டிகைகளை கொண்டாடுங்கள் – பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு வலியுறுத்து!

Friday, December 24th, 2021

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கருத்திற்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் பண்டிகைகளை கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, குடும்ப உறுப்பினர்களுடன் பார்ட்டிகள் மற்றும் ஒன்றுகூடல்களை மட்டுப்படுத்துமாறு அந்த அமைச்சு மக்களை வலியுறுத்தியுள்ளது.

அத்தகைய விருந்துகளும் சுகாதார வழிகாட்டுதல்களை கடுமையாகப் பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பதுவன்துடாவ வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற தகுதியுடையவர்கள் கூடிய விரைவில் அதனைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பூஸ்டர் தடுப்பூசி மூலம் வழங்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மரணங்களைத் தடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அரச சுற்றுநிருபங்களுக்கு புறக்கணிக்கும் செயற்பாடு - மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு பதிலளிக்கமுடி...
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தனியொரு நபர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது - ஞானசார தேரர்...
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் - பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன இடைய...