குடிநீர் பிரச்சினை: சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு – அச்சத்தில் மக்கள்!

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் அதிகளவான மக்கள் தொடர்ந்து சிறுநீரக நோய் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நோய் தாக்கத்திற்கு உள்ளாகிய பலர் சரியான உணவு மற்றும் போசாக்கான ஆகாரங்களை பெற்றுக் கொள்ள முடியாது உயிரிழந்துள்ளனர்.
இதனைவிட, தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளர்கள் மாதாந்த சிகிச்சைகளை மல்லாவி வைத்தியசாலையில் பெற்று வருகின்றதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடிநீர் பிரச்சினை காரணமாகவே இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க கூடிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
கா.பொ.த சாதாரண தரப்பரீட்சையின் செய்முறை ப்பரீட்சை ஆரம்பம்!
அரச நிறுவனங்களுக்கான புதிய கட்டட நிர்மாணப் பணிகளை ஒத்திவைக்க தீர்மானம் - நிதி அமைச்சின் செயலாளர் எஸ்...
குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு - லேடி ரிட்ஜ்வே குழந்தை நல மரு...
|
|