குடாநாட்டு வைத்தியசாலைகளில் O நெகடிவ் குருதிக்கு பெரும் தட்டுப்பாடு

Thursday, April 21st, 2016

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை, பருத்தித் துறை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில்  O நெகடிவ் குருதி வகைக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. ஆகவே ,குறித்த குருதி வகைக்கு உரியவர்கள் உடனடியாகத் தமக்கு அருகிலுள்ள ஏதாவதொரு வைத்தியசாலைக்குச் சென்று குருதி வழங்கி நோயாளர்களின்  உயிரைக் காக்க உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள மேற்படி மூன்று வைத்தியசாலைகளிலும் குறித்த குருதி வகைக்குத் தட்டுப்பாடு காணப்படும் நிலையில் வெளிமாவட்ட வைத்தியசாலைகளிலிருந்தும் இந்தக் குருதி வகையைப் பெற முடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. O நெகடிவ் குருதி வகையுடைய நோயாளருக்கு வேறு வகைக் குருதியை வழங்க முடியாத காரணத்தால் குறித்த குருதி வகையுடையவர்கள் உடனடியாக மேற்படி வைத்தியசாலைகளின் இரத்த வங்கிப் பிரிவினருடன்  தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையுடன் சேர்ந்து புற்றுநோய்ப் பிரிவும் இயங்கி வருகின்ற நிலையில் ஏனைய வைத்தியசாலைகளை விட அதிகளவிலான குருதி  தேவையாகவுள்ளதாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம. பிரதீபன் தெரிவித்தார்.  ஏனைய குருதி வகைகள் தற்போது  கையிருப்பிலுள்ள போதும் O நெகடிவ் குருதி வகைக்கே பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்

Related posts:


அரியாலை கிழக்கு ஶ்ரீ முத்துவிநாயகர் சனசமூக நிலைய கட்டடம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச...
மாகாணசபை ஆட்சியின் பின்னரே வடக்கின் கல்வி வீழ்ச்சி: இறுதி நிலையில் கிளிநொச்சி மாவட்டம் மாவட்டம் - ...
அரசியல் பழிவாங்கல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச அதிகாரிகளுக்கு நிவாரணம்: அறிக்கை தயார்!