குடாநாட்டில் 60 வீதமான நெற் செய்கை தொடர் மழையால் அழிவு!

யாழ்.குடாநாட்டில் பெரும் போக நெற்செய்கை 60 வீதமானவை வெள்ளத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன..
தொடர்ச்சியாகக் கொட்டித் தீர்த்த கடும் மழையினால் நெற்பயிர்களில் பெரும்பாலானவை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
கூடுதலாக தாழ்ந்த வயல்நிலங்களில் செய்கையில் ஈடுபட்ட பயிர்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.
மழை காலதாமதமாகப் பெய்தமையாலும் மற்றும் புழுதி விதைப்பு மூலம் செய்கையை மேற்கொண்ட பயிர்களுமே பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது இப்பயிரழிவு தொடர்பாக முழுமையான தரவுகளை மேற்கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட கிட்டத்தட்ட அறுபது வீதமான நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நெற்பயிரழிவால் குடாநாட்டில் செய்கையாளர்கள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
Related posts:
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீள்சுழற்சிக்கான கழிவு சேமிப்பு நிலையங்கள் விஸ்தரிப்ப...
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை தயாரித்தவர் சட்டம் பற்றி அறியாதவர்
கிழக்கின் கொவிட் நிலைமைகள் தொடர்பில் விசேட அவதானம் - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!
|
|