குடாநாட்டில் குற்ற செயல்களை கட்டுப்படுத்த புதிய பொலிஸ் பிரிவு!
Sunday, February 19th, 2017
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகரித்துள்ள குற்ற செயல்களை கட்டுப்படுத்துவதற்கு துவிச்சக்கர வண்டி பொலிஸ் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பொலிஸ் பிரிவு யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த பிரிவு இருபத்தி நான்கு மணிநேரமும் தமது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.
இதன் ஆரம்ப வைபவம் இன்று காலை யாழ்.தலைமை பொலிஸ் நிலையம் முன்பாக நடைபெற்றது.
யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்தின பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இந்த பிரிவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதன் போது யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
பயிர்களுக்குப் பீடைநாசினி விசிறினால் 14 நாள்களின் பின்னரே அறுவடை செய்ய வேண்டும் - சுகாதாரப் பகுதியின...
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்றுமுதல் ஆரம்பம் - கொரோனா தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்கு...
மன்னராட்சியின் பின் இதுவே முதல் தடவை - செங்கடல் பாதுகாக்கப்படாவிட்டால் இலங்கையின் துறைமுகங்கள் பாரிய...
|
|
|


