கிளிநொச்சி பூநகரியில் உவர்நீர் தடுப்பணைசேதம் – ஆறாயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு.

Wednesday, May 3rd, 2017

கிளிநொச்சிமாவட்டத்தின் பூநகரிகரியாலைநாகபடுவான் பகுதியில் உவர்நீர்; தடுப்பணைகள் இதுவரையில் புனரமைக்கப்படாதுள்ளநிலையில் ஆறாயிரம் ஏக்கர் வரையிலானவயல்நிலங்கள் உவர் நிலங்களாகமாறியுள்ளதாகநெற்செய்கையாளர்கள்கவலைதெரிவித்துள்ளனர்.

பூநகரிபிரதேசசெயலர் பிரிவுக்குள்ளான பல்லவராயன்கட்டு, கரியாலை நாகபடுவான், குமுழமுனை, மற்றும் நொச்சிமுனை ஆகிய பகுதிகளிலுள்ள வயல் நிலங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரையோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த குறித்த உவர்நீர் தடுப்பணைகள் யுத்தகாலத்தின்போது முழுமையாக சேதமடைந்திருந்த நிலையில் அவைமீளவும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையென்றும், இவ்விடயம் தொடர்பாக துறைசார்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் என்றும் நெற்செய்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உவர்நீர் தடுப்பணைகள் அமைக்கப்படாத காரணத்தினால் வயல்களுக்குள் கடல்; நீர் உட்புகுந்ததை அடுத்துபயர்செய் நிலங்கள் உவர்நிலங்களாகமாறியுள்ளன. இவ்வாறுஉவர்நீர் தடுப்பணைகள் அழிவடைந்துள்ளதன் காரணமாகஆறாயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

“மொட்டைக்கறுப்பன்”நெல் விளைச்சலுக்கபு; பெயர்பெற்ற கிளிநொச்சி பூநகரி பகுதியில் உவர்நீர் தடுப்பணை சேதமடைந்ததன் காரணமாக ஆறாயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையானது நெற்செய்கையாளர்களுக்கும் மக்களுக்கும் மட்டுமன்றி பிரதேசத்தின் பொருளாதாரத்திற்கும் பாரிய பாதிப்பென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: