மேலதிக நேரம் பணிபுரிய அசிரியர்களுக்கு அழுத்தம் என அதிபர்கள் மீது குற்றச்சாட்டு!

Tuesday, January 10th, 2017

பாடசாலை நேரத்தை விட மேலதிகமாக 2 மணித்தியாலங்கள் பணியாற்ற வேண்டுமென அதிபர்கள் வற்புறுத்தி வருகின்றனர் என ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை நேரம் காலை 7.30 மணி தொடக்கம் பி.ப 1.30 மணிவரையென கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்த பி.ப 3.30மணிவரை ஆசிரியர்கள் கடமையாற்ற வேண்டுமென அதிபர்கள் வற்புறுத்துகின்றனர். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளோம் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளரால் விடுக்கப்பட்ட அறிக்கையில், பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரத்தில் ஆசிரியர்களை; கடமையில் ஈடுபடுத்த வேண்டாமெனக் குறிப்பிட்டுள்ளது. ஆயினும் கட்டாயம் குறைந்தது ஒன்றரை மணிநேரமாவது மேலதிகமாகக் கடமையில் ஈடுபட வேண்டும் என பாடசாலைகளில் நடைபெறும் கூட்டங்களி;ல் அதிபர்கள் வற்புறுத்துகின்றனர். இதனால் கணவன் – மனைவி இருவரும் ஆசிரியர்களாக உள்ள இடங்களில் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து வீட்டுக்குச் சென்று காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இந்தப் பிரச்சினைகளை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டிய போது பிள்ளைகளைப் பார்;க்க வேண்டுமாயின் கணவர் அல்லது மனைவி சேவையிலிருந்து விலகிப் பார்த்துக் கொள்ளலாம் என்று அதிபர்களால் கூறப்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் பாடசாலை நேரத்தைவிட 2மணித்தியாலங்கள் மேலதிகமாக பணியாற்ற வேண்டும் என்று அதிபர்கள் வற்புறுத்த முடியாது. ஆயினும் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் இணைப் பாடவிதானங்களுக்காக மாலை வேளைகளில் கற்பிக்கலாம் என்றுள்ளது. ஆசிரியர்களைக் கற்பிக்குமாறு அதிபர்கள் கோரியிருக்காலம். மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டுதாம் விரும்பினால் ஆசிரியர்கள் இந்தச் சேவையை செய்ய முடியும். வற்புறுத்த முடியாது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

i3-3-300x248

Related posts:

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை எதிர்காலத்திலும் பல வெற்றிகளை பதிவு செய்யும் - பான் கீ மூன...
சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டம் – அமைச்சர் நாமல் ராஜபக்ச!
ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதிசெய்ய விசேட கலந்துரையாடல் - லிட்ரோ தலைவர் தெரிவிப்பு!