கிழக்கின் வறிய மாணவர்களின் கற்றலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரான்ஸ் கிளை உதவிக்கரம்!

Sunday, December 16th, 2018

கிழக்கு மாகாணத்தில் உள்ள வறிய மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரான்ஸ் கிளை முதற்கட்டமாக ஒருதொகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மாணவர்கள் பலர் வறுமை நிலை காரணமாக தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் அம்மாணவர்களது கற்றல் செயற்பாடுகள் தடைப்படாது ஊக்குவிப்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பிரான்ஸ் கிளையின் உப அமைப்பாளர் சிறிகரன் டேவிட் என்பவரின்  ஏற்பாட்டில் முதற்கட்டமாக ஒருதொகுதி வறிய மாணவர்களுக்கு நேற்றையதினம் (15) குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் திருகோணமலை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட 42 வறிய  மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் எண்ணக்கருவான தாயக மக்களின் மீழெழுச்சிக்கு புலம்பெயர் தேச உறவுகள் கரங்கொடுக்க வேண்டும் என்பதற்கிணங்க இந்த செயற்பாடு அமைந்துள்ளமையானது தாயகத்தில் வாழும் எமது மக்களின் வாழ்வியலுக்கு புலம்பெயர் தேச உறவுகளின் நேசக்கரம் நீட்டலின் முதற்படியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

48363080_276308089725616_8674334715160821760_n

48410996_320122608589023_6371144032936001536_n

Related posts: