கிளி. மீன்பிடி அபிவிருத்தியில் இந்த ஆண்டு முன்று வேலைத் திட்டங்கள்!

Wednesday, May 15th, 2019

கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 2019 ஆம் ஆண்டில் மூன்று வேலைகளுக்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்யும் வகையில் கடந்த ஆண்டுகளில் பல்வேறு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்த ஆண்டு மூன்று கடற்றொழில் பரிசோதகர் பிரிவுகளில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதாவது கண்டாவளை கடற்தொழில் பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட நாகேந்திரபுரம் பகுதியில் இரண்டு மில்லியன் ரூபா செலவில் பொது மண்டபம் ஒன்றினை அமைப்பதற்கும் பச்சிலைப்பள்ளி கடற்றொழில்  பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட புலோப்பளை அறத்தி நகர் கிராமத்தில் இரண்டு மில்லியன் ரூபா செலவில் மீனவர் ஓய்வு மண்டபம் ஒன்றினை அமைப்பதற்கும் நாச்சிக்குடா கடற்றொழில்  பிரிவிற்குட்பட்ட யாகப்பர் கிராமிய அமைப்பின் படகுத்துறை ஆழப்படுத்துவதற்கு இரண்டு மில்லியன் ரூபாவும் தேவையென மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அதற்கான அனுமதிகள் பெறப்பட்டுள்ளன.

Related posts: