இலங்கை மக்களுக்கு கனவாக இருந்ததை நியமாக்கி காட்டியவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச – நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ புகழாரம்!

Sunday, March 6th, 2022

இலங்கையில் நெடுஞ்சாலை கலாசாரம் இருக்கவில்லை. வெளிநாடு சென்ற பலரும் அதனை பார்த்தனர். மற்றவர்கள் தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்தார்கள். எங்களுக்கு இது ஒரு கனவாகவே இருந்தது ஆனால் அந்த கனவை இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச அன்று நனவாக்கிக் காட்டியுள்ளார் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்’.

நாரம்மல பிரதேச சபையின் புதிய கட்டடத் திறப்புவிழாவில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாரம்மல பிரதேசத்திற்கு போன்றே மக்களுக்கும் மிகவும் தேவையான நிர்வாக கட்டிடமே இன்று கிடைத்துள்ளது. முன்பு எமது பிரதேச சபை ஒரு கூடாரக் கொட்டகையாகவே காணப்பட்டது. கௌரவ பிரதமர் அவர்களே, நீங்கள் இந்நாட்டை மாற்றினீர்கள். இந்த போரை மாத்திரமல்ல. போரை காரணம் காட்டி நாட்டை கட்டியெழுப்ப தவறவில்லை. போர் இடம்பெறும் போதே நாட்டையும் அபிவிருத்தி செய்தீர்கள்.

போரை காரணங்காட்டி ஆயுதம் கொள்வனவு செய்ய வேண்டும், பாதணிகளை கொள்வனவு செய்ய வேண்டும், சீருடை கொள்வனவு செய்ய வேண்டும் என்று அவற்றை சுட்டிக்காட்டி நாட்டின் அபிவிருத்தியை மறைக்கவில்லை.

போர் இடம்பெறும் போதே இந்நாட்டை புதிய நாடாக மாற்ற நீங்கள் நடவடிக்கை மேற்கொண்டீர்கள். அதன் மூலமே புறநெகும தோற்றம் பெற்றது. புறநெகும ஊடாக நகரிலுள்ள நகர சபை, பிரதேச சபைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. அரசாங்க அதிபர் அலுவலகம், உள்ளூராட்சி சபைகளையும் மறக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது மட்டுமல்ல, அடுத்த கட்டமாக நீர்ப்பாசன முன்மொழிவுகள். தெதுரு ஓயா திட்டத்தை எமது மாவட்டத்தில் உங்களால் கூட நம்ப முடியவில்லை. மேலாக பறந்து செல்லும் போது பெரிய கடல் போல் இருக்கிறது என்று நீங்களே கூறினீர்கள்.

இவ்வளவு நீர்ப்பாசனத் திட்டங்களை நீங்கள் உருவாக்கினீர்களா? இவை மட்டும் உருவாக்கப்படவில்லை. விவசாயிகளின் பொருளாதாரம் வலுப்பெற்றது. 8, 9 ரூபாய்க்கு காணப்பட்ட ஒரு கிலோ நெல் விலை ரூபாய் 40 வரை உயர்த்தப்பட்டது.

அப்போது விவசாயிகள் வந்து விஷம் அருந்தி உயிரிழக்க போவதாகச் சொல்லவில்லை. அப்படி ஒரு சகாப்தம் இருக்கவில்லை. விவசாயிகள் குறித்து தேடிப் பார்த்தார். அரச அதிகாரிகள் குறித்து தேடிப்பார்த்தீர்கள். நிர்வாக கட்டிடங்கள் குறித்து ஆராய்ந்தீர்கள். அடுத்து அரச துறைக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்தீர்கள். அதுதான் உருவாக்கப்பட்ட புதிய கலாசாரம். உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல் நம் நாடு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை உங்களுக்கு இருந்தது.

அமெரிக்க குடிமக்களும் வேலை இழந்தமை எமக்கு நினைவிருக்கிறது. வீட்டுக்கடனை கட்ட முடியாமல் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பொருளாதாரமும் சரிந்தது.

அன்றுபோல் இப்போதும் டொலர் பிரச்சனை. போர் செய்ய பணம் இல்லை. ஆனால் நீங்கள் அதையெல்லாம் வென்றீர்கள். போரிட முடியாத போர் முடிவுக்கு வந்து உலகிற்கு காட்டப்பட்டது. அதன் பிறகு உங்களது வளர்ச்சியால் அந்த சவால்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அவதூறாகப் பேசினார்கள்.

2015 ஆம் ஆண்டுக்கு பின்னரும் நீங்கள் ஜனாதிபதியாக இருந்திருந்தால் எத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்காது.

ஆனால் உங்களால் உருவாக்கிய பொருளாதாரம் அன்றைய நல்லாட்சியாளர்களால் அழிக்கப்பட்டது. உருவாக்கிய தேசிய பாதுகாப்பு அழிக்கப்பட்டது. அதனால்தான் டொலர் இல்லாது போனது. ஐ.எஸ்.ஐ.எஸ். சஹ்ரான் தாக்குதலுக்கு பிறகுதான் இந்த நாட்டிற்கு வெளிநாட்டவர்கள் வரவில்லை. அங்குதான் டொலர் கையிருப்பு குறைய ஆரம்பித்தது. அதற்கு முன்னர்  அவர்கள் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்திருந்தனர் என்றும் சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: