கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக உப்புல செனவரத்தின பதவியேற்பு!
Thursday, October 12th, 2023
கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக உப்புல செனவரத்தின இன்றையதினம் பதவியேற்றுள்ளார்.
பதவியேற்பு நிகழ்வு கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று காலை இடம் பெற்றது.
சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்று மதத் தலைவர்களின் ஆசியைப் பெற்றுக் கொண்ட பின்னர் வைபவ ரீதியாக காலை 10.00மணி அளவில் பிரதி பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இன்றைய பதவியேற்பு நிகழ்வில் கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மத்திய வங்கி மோசடிதொடர்பான கோப் குழுவின் அறிக்கை 25ஆம் திகதி சமர்ப்பிப்பு!
63 தொழிற்சங்கங்கள் சைட்டத்திற்கு எதிராக போராடுவதற்கு முடிவு!
கடலட்டைப் பண்ணை எமக்கு வேண்டும் – யாழ்ப்பாணத்தில் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம்!
|
|
|


