கொழும்புத்துறை மேற்குக்கு கூடுதலான தண்ணீர் தேவை என  கோரிக்கை!

Thursday, September 27th, 2018

கொழும்புத்துறை மேற்குப் பிரதேசத்துக்குக் கூடுதலான குடி தண்ணீரைப் பெற்றுத்தருமாறு யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்புத்துறை மேற்கு விநாயகர் ஆலயத்துக்குச் சொந்தமான நன்னீர் கிணறு உவர் நீராக திடீரென மாறியதால் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மூவாயிரம் வரையிலான குடும்பங்கள் குடிதண்ணீரைப் பெறமுடியாது சிரமப்பட்டு வருகின்றன. 150 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமை வாய்ந்த இந்த நன்னீர் கிணறு திடீரென உவர்நீராக மாறியதால் குடிதண்ணீரை பெறுவதற்குப் பிரதேச மக்கள் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாநகராட்சி மன்றத்தினால் ஆலயத்துக்கு அருகில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி ஊடாக பிரதேச மக்களுக்கு குடிதண்ணீரைப் பெற்று விநியோகிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தினமும் இரண்டு தடவைகளாவது இந்தத் தாங்கிக்குத் தண்ணீரை மாநராட்சி மன்றம் நிரப்புவதற்கு ஏற்ற நடவடிக்கையை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: