கிளிநொச்சி சந்தைக் கடைகளை விரிவாக்க நிதி மூலங்கள் வேண்டும்.!
Tuesday, October 24th, 2017
நாச்சிக்குடா பொதுச்சந்தையில் அமைந்துள்ள கடைகளை விரிவுபடுத்துவதற்காக நிதி மூலங்கள் கோரப்பட்டுள்ளன என்று பூநகரி பிரதேச சபை செயலாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசசபைக்கு உட்பட்ட நாச்சிக்குடா பகுதியில் அமைந்துள்ள சந்தைக் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் உள்ள கடைகளை விரிவுபடுத்தல் திட்டத்திற்காகத் தமது அமைச்சிடம் நிதி கோரியுள்ளோம்.
குறித்த கடைத் தொகுதிகளில் அமைந்துள்ள கடைகள் சிறியனவாகக் காணப்படுகின்றன. இதனால் வியாபாரிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை நிவர்த்தி செய்வதற்காக இந்தத் தட்டத்தினை அமுல்ப்படுத்தத் திட்டமிடப்படுகிறது. பிரதேசசபைகளை வலுவூட்டல் என்ற திட்டத்தின் கீழ் இந்தத் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்.
இதற்கான நிதி கிடைக்கப் பெற்றதும் உடனடியாக வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்று பூநகரி பிரதேசசபைச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


