உரத் தட்டுப்பாடு கிடையாது – அமைச்சர் துமிந்த திஸாநாயக்க!

Thursday, April 19th, 2018

எதுவித உரத்தட்டுப்பாடும் நாட்டில் கிடையாது என கமத்தொழில் துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் உர விநியோகத்தில் எதுவித தட்டுப்பாடும், தாமதமும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என்றும் சகல விடயங்களையும் கணனிமயப்படுத்தி வருவதால் ஊழல் மோசடிகளுக்கும் இதன்மூலம் இடமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்ர்துடன் யூரியா, ரிஎஸ்பி, எம்ஓபி, எஸ்ஏ என்ற சகல வகை உரங்களும் 1500 ரூபாவுக்கு குறைவான விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும். ஒரு பொதி யூரியாவின் விலை மூவாயிரத்து 500 ரூபாவாக இருந்தால் அரசாங்கம் இரண்டாயிரம் ரூபாவை பொறுப்பேற்கும்.

அதேபோன்று நெற்செய்கைக்கான உரப்பொதிக்கான செலவில் மூவாயிரம் ரூபாவை அரசாங்கம் ஏற்கிறது. இது தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், 011-303-6666 என்ற தொலைபேசி ஊடாக அறிவிக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: