கிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை!

Saturday, September 18th, 2021

கிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி, எதிர்வரும் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் நிமால் அருமைநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 20 முதல் 29  வயதுக்குட்பட்ட 28 ஆயிரத்து 482 பேர் உள்ளனர்.

அவர்களுக்கான முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை, கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், தர்மபுரம் மத்திய கல்லூரி, முழங்காவில் ஆதார வைத்தியசாலை, பூநககரி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேபோன்று எதிர்வரும் 21 ஆம் திகதி, கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலை, அக்கராஜன் மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மகா வித்தியாலயம், முழங்காவில் ஆதார வைத்தியசாலை, தர்மபுரம் மத்தியகல்லூரி, பளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்றிலும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட இருக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: